முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காம பாத யாத்திரீகர்கள் கலந்து கொண்ட விசேட பூசை வழிபாடுகள் நேற்றையதினம்(13) இடம்பெற்றது.
இந்த பூசை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
குறிப்பாக பல்வேறு இடங்களிலும் இருந்தும் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தினூடாகவும் பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் பாத யாத்திரையாகச் செல்கின்றனர்.
இவ்வாறு கதிர்காம திருத்தலத்திற்கு செல்லும் பாதயாத்திரீகர்கள் பலரும் முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தங்கியிருந்து விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து தமது பாதயாத்திரையைத் தொடர்ந்தனர்.
கதிர்காம யாத்திரீகர்கள் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு. முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காம பாத யாத்திரீகர்கள் கலந்து கொண்ட விசேட பூசை வழிபாடுகள் நேற்றையதினம்(13) இடம்பெற்றது. இந்த பூசை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். குறிப்பாக பல்வேறு இடங்களிலும் இருந்தும் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தினூடாகவும் பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் பாத யாத்திரையாகச் செல்கின்றனர். இவ்வாறு கதிர்காம திருத்தலத்திற்கு செல்லும் பாதயாத்திரீகர்கள் பலரும் முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தங்கியிருந்து விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து தமது பாதயாத்திரையைத் தொடர்ந்தனர்.