• Aug 13 2025

கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம்; முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ பேச்சாளர் கருத்து

Chithra / Aug 13th 2025, 12:13 pm
image


முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருண கமகே நிராகரித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர், ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள்.

படையினர் அவர்களில் ஒருவரை கைது செய்தனர். ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டோம் என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர்,

பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன, ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் என தெரிவித்துள்ளார்.


 

கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம்; முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ பேச்சாளர் கருத்து முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருண கமகே நிராகரித்துள்ளார்.நாளிதழ் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் அவர்  இதனை தெரிவித்துள்ளார்.ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர், ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள்.படையினர் அவர்களில் ஒருவரை கைது செய்தனர். ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டோம் என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர்,பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன, ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement