அனைத்து படுகொலைகளுக்கும், அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிராக நீதிகோரும் நடைபயணம் ஒன்று யாழில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம் இப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, இந்த நடைபயணம் கல்வியங்காட்டுச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் நுழைவாயில் வரை நடைபெற்றது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எந்த வன்முறையாலும் எங்களை ஒடுக்க முடியாது, வன்முறை நிறைவுக்கு கொண்டு வருவோம், மண்ணுக்கு கீழ் கொலைகளை புதைக்காதீர்கள், வாழும் உரிமையை அழிக்காதீர்கள், நியாயம் கோருவோம்; பயத்தில் வாழ மாட்டோம், நியாயம் கோராத வன்முறைகளும் கொலைகளும் மக்கள் பேரெழச்சியாக மாறும், கொலைகளுக்கு நீதி வேண்டும்' மன்னிப்பு அல்ல போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் நடைபயணத்தில் பெருமளவான மக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொலைகளுக்கு நீதி வேண்டும்; மன்னிப்பு அல்ல யாழில் மாபெரும் நடைபவனி அனைத்து படுகொலைகளுக்கும், அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிராக நீதிகோரும் நடைபயணம் ஒன்று யாழில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கம் இப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, இந்த நடைபயணம் கல்வியங்காட்டுச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் நுழைவாயில் வரை நடைபெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எந்த வன்முறையாலும் எங்களை ஒடுக்க முடியாது, வன்முறை நிறைவுக்கு கொண்டு வருவோம், மண்ணுக்கு கீழ் கொலைகளை புதைக்காதீர்கள், வாழும் உரிமையை அழிக்காதீர்கள், நியாயம் கோருவோம்; பயத்தில் வாழ மாட்டோம், நியாயம் கோராத வன்முறைகளும் கொலைகளும் மக்கள் பேரெழச்சியாக மாறும், கொலைகளுக்கு நீதி வேண்டும்' மன்னிப்பு அல்ல போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் நடைபயணத்தில் பெருமளவான மக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.