• Dec 09 2024

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலக்கவுள்ள யாழ். சிறுமி..! குவியும் பாராட்டுக்கள்..!

Sharmi / Nov 4th 2024, 11:06 am
image

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார்.

வட மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில்  தங்க பதக்கத்தை  பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வட மாகாணத்தால் ஒரே ஒரு தங்க பதக்கம் மாத்திரமே வெல்லப்பட்டது. அதனை குறித்த சிறுமியே பெற்றுள்ளார்.

இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக பங்குபற்றவுள்ளார்.

அத்துடன் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக இவர் விளையாடவுள்ளமை குறிப்பிடதக்கது. 

வடமாகாணம் மட்டும் அன்றி இலங்கையில்  மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமியாக இவர் திகழ்கிறார். அத்துடன் Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன்  உலக அளவில் 4 ம் இடத்தில் உள்ளார். 

இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion 2024 இல், வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலக்கவுள்ள யாழ். சிறுமி. குவியும் பாராட்டுக்கள். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார்.வட மாகாணத்தை சேர்ந்த இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில்  தங்க பதக்கத்தை  பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.வட மாகாணத்தால் ஒரே ஒரு தங்க பதக்கம் மாத்திரமே வெல்லப்பட்டது. அதனை குறித்த சிறுமியே பெற்றுள்ளார்.இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக பங்குபற்றவுள்ளார். அத்துடன் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக இவர் விளையாடவுள்ளமை குறிப்பிடதக்கது. வடமாகாணம் மட்டும் அன்றி இலங்கையில்  மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமியாக இவர் திகழ்கிறார். அத்துடன் Rapit (15+10 sec ) சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன்  உலக அளவில் 4 ம் இடத்தில் உள்ளார். இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion 2024 இல், வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement