வடக்கு- கிழக்கிலுள்ள காணிகளை உரிமையாளர்கள் பதிவு செய்யாவிடின் அந்தக் காணிகளின் பதிவுகளை இரத்து செய்வோம் என்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி ஊடாக அரசாங்கத்திற்கு காணி சுவீகரிக்கப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமான நிலையில் இது தொடர்பான கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் தெரிவிக்கையில்,
வடக்கு-கிழக்கிலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைக் குறிப்பாக மையப்படுத்தி அங்கிருக்கின்ற பெருமளவான ஏக்கர் காணிகளை என்ன தேவை என்பதற்கு ஒரு மறைமுகமான கருத்தியலோடு அந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கும் அந்தக் காணிக்குரிய உரிமையாளர்கள் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் உங்களுடைய பதிவுகளை நாங்கள் இரத்து செய்வோம்என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதனை காணி ஆணையாளர் தான் கூறியிருக்கின்றார். ஆகவே இது ஒரு அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது. வடக்கு-கிழக்கிலே குறிப்பாக நீண்டகாலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுடைய காணிகள், அவர்களுடைய ஆவணங்கள் பலதும் கூட இப்போது கச்சேரிகளிலோ அரச அலுவலகங்களில் இல்லை. அப்படியிருக்கும் வேளை இவ்வாறானதொரு வர்த்தமானி நீங்கள் வெளியிடப்பட்டிருப்பது என்பது ஒரு அச்சுறுத்தல். இந்த வர்த்தமானிஅறவித்தலை நீங்கள் மீளப்பெறமுடியுமா எனக் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
வடக்கு கிழக்கு மக்களுக்கு விசேடமாக யுத்தம் காரணமாக இந்தக் காணிப் பிரச்சினைகள் எழுந்திருப்பதால் அந்தக் காணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஏனென்றால் ஏனைய காணிகளில் இருக்கும் பிணக்குகளைத் தீர்ப்பது 90 வீதமாகவும் சில இடங்களில் 98 சதவீதமாகவும் காணப்படுகின்றது.
ஆனால் வடமகாணத்தில் 30.36 வீதம் தான் இது தீர்க்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் 81 சதவீதம் காணப்படுகின்றது. யுத்தம் காரணமாகவும் ஏனைய காரணங்களாலும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றார்கள். சிலர் உறவினர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். சிலரது ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றது.
நாம் பாராளுமன்றத்தில் பொறுப்புடன் கூறுகின்றேன். காணிகளைக் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. ஆனால் தாங்கள் ஆவணங்களை அல்லது ஏதாவது உறுதிப்படுத்தக் கூடியவற்றை முன்வைத்து இது எனது காணி என்று யாராவது விடயங்களை முன்வைத்தால் காணி உறுதி வழங்கப்படும். அது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தெரியப்படுத்தலாம்.
பிரதமர் தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி 11 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறும். அங்கே நீங்கள் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். குறித்த வர்த்தமானி ஊடாக அரசாங்கத்திற்கு காணி சுவீகரிக்கப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆகவே பிரதமரது சந்திப்பில் நாங்கள் இதைக் கலந்துரையாடுவோம்.
நாடு பூராகவும் இது இடம்பெறுவது வழக்கம் தான். ஆனால் வடகிழக்கில் இடம்பெறவிருக்கும் அந்த நிலமைகளின் அடிப்படையில் காணிகளை வழங்க முடியாது போயுள்ளது. ஆகவே இந்தக் காணிகளின் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாங்கள் அரசாங்கம் சார்பில் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம். எனத் தெரிவித்தார்.
வர்த்தமானி ஊடாக காணி சுவீகரிக்கப்படும் என நினைப்பது தவறு- பாராளுமன்றத்தில் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் வடக்கு- கிழக்கிலுள்ள காணிகளை உரிமையாளர்கள் பதிவு செய்யாவிடின் அந்தக் காணிகளின் பதிவுகளை இரத்து செய்வோம் என்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி ஊடாக அரசாங்கத்திற்கு காணி சுவீகரிக்கப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமான நிலையில் இது தொடர்பான கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் தெரிவிக்கையில், வடக்கு-கிழக்கிலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைக் குறிப்பாக மையப்படுத்தி அங்கிருக்கின்ற பெருமளவான ஏக்கர் காணிகளை என்ன தேவை என்பதற்கு ஒரு மறைமுகமான கருத்தியலோடு அந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கும் அந்தக் காணிக்குரிய உரிமையாளர்கள் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் உங்களுடைய பதிவுகளை நாங்கள் இரத்து செய்வோம்என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.இதனை காணி ஆணையாளர் தான் கூறியிருக்கின்றார். ஆகவே இது ஒரு அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கின்றது. வடக்கு-கிழக்கிலே குறிப்பாக நீண்டகாலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுடைய காணிகள், அவர்களுடைய ஆவணங்கள் பலதும் கூட இப்போது கச்சேரிகளிலோ அரச அலுவலகங்களில் இல்லை. அப்படியிருக்கும் வேளை இவ்வாறானதொரு வர்த்தமானி நீங்கள் வெளியிடப்பட்டிருப்பது என்பது ஒரு அச்சுறுத்தல். இந்த வர்த்தமானிஅறவித்தலை நீங்கள் மீளப்பெறமுடியுமா எனக் கேள்வியெழுப்பினார்.இதற்குப் பதிலளித்த அமைச்சர், வடக்கு கிழக்கு மக்களுக்கு விசேடமாக யுத்தம் காரணமாக இந்தக் காணிப் பிரச்சினைகள் எழுந்திருப்பதால் அந்தக் காணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஏனென்றால் ஏனைய காணிகளில் இருக்கும் பிணக்குகளைத் தீர்ப்பது 90 வீதமாகவும் சில இடங்களில் 98 சதவீதமாகவும் காணப்படுகின்றது. ஆனால் வடமகாணத்தில் 30.36 வீதம் தான் இது தீர்க்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் 81 சதவீதம் காணப்படுகின்றது. யுத்தம் காரணமாகவும் ஏனைய காரணங்களாலும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றார்கள். சிலர் உறவினர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். சிலரது ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றது.நாம் பாராளுமன்றத்தில் பொறுப்புடன் கூறுகின்றேன். காணிகளைக் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. ஆனால் தாங்கள் ஆவணங்களை அல்லது ஏதாவது உறுதிப்படுத்தக் கூடியவற்றை முன்வைத்து இது எனது காணி என்று யாராவது விடயங்களை முன்வைத்தால் காணி உறுதி வழங்கப்படும். அது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தெரியப்படுத்தலாம்.பிரதமர் தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி 11 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறும். அங்கே நீங்கள் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். குறித்த வர்த்தமானி ஊடாக அரசாங்கத்திற்கு காணி சுவீகரிக்கப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆகவே பிரதமரது சந்திப்பில் நாங்கள் இதைக் கலந்துரையாடுவோம். நாடு பூராகவும் இது இடம்பெறுவது வழக்கம் தான். ஆனால் வடகிழக்கில் இடம்பெறவிருக்கும் அந்த நிலமைகளின் அடிப்படையில் காணிகளை வழங்க முடியாது போயுள்ளது. ஆகவே இந்தக் காணிகளின் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாங்கள் அரசாங்கம் சார்பில் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றோம். எனத் தெரிவித்தார்.