• Apr 26 2026

இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் - ஈரானில் 40 பேர் உயிரிழப்பு!

shanu / Feb 28th 2026, 8:15 pm
image

தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். 


மினாப் நகரில் நிகழ்ந்த இந்த மரணங்களே, இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் உயிரிழப்புகளாகும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் தளம் ஒன்று மினாப் நகரில் அமைந்துள்ளது. 


ஈரான் மீதான இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய மக்களை நோக்கி, உங்கள் விதியை நீங்களே தீர்மானியுங்கள் என்றும், 1979 ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்து வரும் இஸ்லாமியத் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். 


ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் சில நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


நாடு முழுவதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அத்துடன் தலைநகரில் இருந்து புகை மூட்டம் எழும்புவதைக் காண முடிகின்றது. 


இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இதேபோன்றதொரு பரந்த இலக்கை வலியுறுத்தினார். 


எமது கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரானிய மக்கள் தமது விதியைத் தாமே கையில் எடுப்பதற்கான சூழலை உருவாக்கும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் - ஈரானில் 40 பேர் உயிரிழப்பு தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மினாப் நகரில் நிகழ்ந்த இந்த மரணங்களே, இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் உயிரிழப்புகளாகும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் தளம் ஒன்று மினாப் நகரில் அமைந்துள்ளது. ஈரான் மீதான இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிய மக்களை நோக்கி, உங்கள் விதியை நீங்களே தீர்மானியுங்கள் என்றும், 1979 ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்து வரும் இஸ்லாமியத் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் சில நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் தலைநகரில் இருந்து புகை மூட்டம் எழும்புவதைக் காண முடிகின்றது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இதேபோன்றதொரு பரந்த இலக்கை வலியுறுத்தினார். எமது கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரானிய மக்கள் தமது விதியைத் தாமே கையில் எடுப்பதற்கான சூழலை உருவாக்கும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement