• Apr 21 2026

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மறைவு; அமைச்சர் விஜித, எதிர்க்கட்சித் தலைவர் தூதரகத்தில் இரங்கல்

Chithra / Mar 4th 2026, 7:56 pm
image

 

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதரகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது செய்தியைப் பதிவு செய்தார்.


"ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி  மறைவு குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக்காலத்தில் இலங்கை மற்றும் ஈரான் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமான முறையில் விரிவடைந்தன. ஈரான் வழங்கி வரும் நட்புறவை இலங்கை இப்போதும் உயர்வாக மதிக்கிறது. இந்த துயரமான வேளையில் எமது எண்ணங்கள் ஈரான் நாட்டு மக்களுடன் நிலைத்திருக்கும்.இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த அமைச்சர், ஈரான் மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்கெடுத்துக் கொள்வதாகத்  விஜித ஹேரத் இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.


இதேவேளை  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று இலங்கைக்கான ஈரானிய தூதரைச் சந்தித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் நடந்து வரும்  போர்ச்சூழலால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார். 


அவ்வாறே, தற்சமயம் நடந்து வரும் போர் சூழலால் ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உயிரிழந்த மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபங்களையும் இரங்கலையும் இதன்போது தெரிவித்தார்.


இந்த மோதல்கள் முடிவுக்கு வந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு பிரார்த்தித்தார்.


ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மறைவு; அமைச்சர் விஜித, எதிர்க்கட்சித் தலைவர் தூதரகத்தில் இரங்கல்  ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதரகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது செய்தியைப் பதிவு செய்தார்."ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி  மறைவு குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக்காலத்தில் இலங்கை மற்றும் ஈரான் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமான முறையில் விரிவடைந்தன. ஈரான் வழங்கி வரும் நட்புறவை இலங்கை இப்போதும் உயர்வாக மதிக்கிறது. இந்த துயரமான வேளையில் எமது எண்ணங்கள் ஈரான் நாட்டு மக்களுடன் நிலைத்திருக்கும்.இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த அமைச்சர், ஈரான் மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்கெடுத்துக் கொள்வதாகத்  விஜித ஹேரத் இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.இதேவேளை  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று இலங்கைக்கான ஈரானிய தூதரைச் சந்தித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் நடந்து வரும்  போர்ச்சூழலால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார். அவ்வாறே, தற்சமயம் நடந்து வரும் போர் சூழலால் ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உயிரிழந்த மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபங்களையும் இரங்கலையும் இதன்போது தெரிவித்தார்.இந்த மோதல்கள் முடிவுக்கு வந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு பிரார்த்தித்தார்.

Advertisement

Advertisement

Advertisement