நுவரெலியா, ரம்பொடை - வெதமுல்ல தோட்ட தேயிலை மலையில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் விஷப்பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெதமுல்ல தோட்ட தேயிலை மலையில் செடிகளைத் துப்புரவு செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று காலை 10:30 மணியளவில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, தேயிலை செடியின் அடிவாரத்தில் மறைந்திருந்த 'விரியன்' பாம்பு ஒன்று அங்கிருந்த தொழிலாளியைத் தீண்டியுள்ளது.
இச்சம்பவத்தில் ரம்பொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே காயமடைந்துள்ளார்.
பாம்பு தீண்டியதையடுத்து, குறித்த நபர் சக தொழிலாளர்களின் உதவியுடன் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
நுவரெலியாவில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியை தீண்டிய விஷப்பாம்பு நுவரெலியா, ரம்பொடை - வெதமுல்ல தோட்ட தேயிலை மலையில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் விஷப்பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெதமுல்ல தோட்ட தேயிலை மலையில் செடிகளைத் துப்புரவு செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று காலை 10:30 மணியளவில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது, தேயிலை செடியின் அடிவாரத்தில் மறைந்திருந்த 'விரியன்' பாம்பு ஒன்று அங்கிருந்த தொழிலாளியைத் தீண்டியுள்ளது.இச்சம்பவத்தில் ரம்பொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே காயமடைந்துள்ளார்.பாம்பு தீண்டியதையடுத்து, குறித்த நபர் சக தொழிலாளர்களின் உதவியுடன் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.