இலங்கையில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில்,
இந்த ஆண்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம்
அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பிலியந்தலை மற்றும் தெஹிவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்குவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டில் பதிவான மொத்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் காரணமாக இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், துப்பாக்கிக் குண்டுக் காயங்களுக்குள்ளான 10 பேர் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 18 துப்பாக்கிச்சூடுகள் – 13 பேர் சுட்டுக்கொலை இலங்கையில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பிலியந்தலை மற்றும் தெஹிவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் இந்த எண்ணிக்கையில் உள்ளடங்குவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இந்த ஆண்டில் பதிவான மொத்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் காரணமாக இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், துப்பாக்கிக் குண்டுக் காயங்களுக்குள்ளான 10 பேர் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் சட்டவிரோத ஆயுதப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.