• Jul 20 2026

டெங்குவால் உயிரிழப்பவர்களில் பெண்களே அதிகம்! ஒரேநாளில் 843 நோயாளர்கள் அடையாளம்

Chithra / Jul 19th 2026, 4:13 pm
image


டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் அதிகப்படியானோர் பெண்களே என்பதால், டெங்கு அறிகுறிகள் தென்பட்டவுடன் பெண்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.


தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள 53 டெங்கு மரணங்களில் 37 பேர் பெண்கள் எனத் தெரிவித்தார்.


பெண்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் சுகவீனமுற்ற பின்னரும் போதிய ஓய்வெடுக்காமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதே என வைத்தியர் கன்னங்கர சுட்டிக்காட்டினார்.


டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், வீட்டுப் பொறுப்புகள் காரணமாக பலர் தங்கள் உடல்நிலையை அலட்சியப்படுத்துகின்றனர்.


இதன் விளைவாக, மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், இதுவே இறுதியில் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுப்பதாகவும் அவர் எச்சரித்தார்.


டெங்கு நோய்க்காக பாரம்பரிய வைத்தியங்களையோ அல்லது வீட்டு வைத்தியங்களையோ நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.


சிகிச்சையில் ஏற்படும் காலதாமதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும், சில சந்தர்ப்பங்களில் சிகிச்சை பலனளிக்காத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படலாம் என்றும் வைத்தியர் கன்னங்கர எச்சரித்தார்.


சமீபத்திய தரவுகளின்படி,  இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஜூலை மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 19,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 39,667 ஆகும். டெங்கு தொற்று காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்குவால் உயிரிழப்பவர்களில் பெண்களே அதிகம் ஒரேநாளில் 843 நோயாளர்கள் அடையாளம் டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் அதிகப்படியானோர் பெண்களே என்பதால், டெங்கு அறிகுறிகள் தென்பட்டவுடன் பெண்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள 53 டெங்கு மரணங்களில் 37 பேர் பெண்கள் எனத் தெரிவித்தார்.பெண்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் சுகவீனமுற்ற பின்னரும் போதிய ஓய்வெடுக்காமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதே என வைத்தியர் கன்னங்கர சுட்டிக்காட்டினார்.டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், வீட்டுப் பொறுப்புகள் காரணமாக பலர் தங்கள் உடல்நிலையை அலட்சியப்படுத்துகின்றனர்.இதன் விளைவாக, மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், இதுவே இறுதியில் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுப்பதாகவும் அவர் எச்சரித்தார்.டெங்கு நோய்க்காக பாரம்பரிய வைத்தியங்களையோ அல்லது வீட்டு வைத்தியங்களையோ நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் எச்சரித்தார்.சிகிச்சையில் ஏற்படும் காலதாமதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும், சில சந்தர்ப்பங்களில் சிகிச்சை பலனளிக்காத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படலாம் என்றும் வைத்தியர் கன்னங்கர எச்சரித்தார்.சமீபத்திய தரவுகளின்படி,  இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஜூலை மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 19,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 39,667 ஆகும். டெங்கு தொற்று காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement