திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் சிறிய நீர்நிலைகள் மற்றும் குளங்கள் பெருமளவில் வறண்டுபோயுள்ள நிலையில், தண்ணீரைத் தேடி காட்டு யானைகள் கூட்டமாகக் குடியிருப்பு பகுதிகளுக்கு அண்மையில் வரத் தொடங்கியுள்ளன.
கந்தளாய் பிரதேசத்தின் ஜயந்திபுரம் மற்றும் சூரியபுரம் பகுதிகளில் அண்மைய நாட்களில் பல காட்டு யானைகள் கூட்டமாகக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதுடன், இரவு நேரங்களில் அவதானத்துடன் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கந்தளாய் – சேருவில பிரதான வீதியின் சித்தாறு பகுதியில் இலட்சக்கணக்கான பறவைகள் திரண்டுள்ளமை இயற்கை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தை பாதித்துள்ள கடும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றிவருவதால், நீர் மற்றும் உணவைத் தேடி வனவிலங்குகள் மற்றும் பறவைகள் இடம்பெயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.
வறட்சி நிலைமை மேலும் தீவிரமடைந்தால் மனிதர் – வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடும் வறட்சி; தண்ணீரைத் தேடி கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் - படையெடுக்கும் பறவைகள் திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் சிறிய நீர்நிலைகள் மற்றும் குளங்கள் பெருமளவில் வறண்டுபோயுள்ள நிலையில், தண்ணீரைத் தேடி காட்டு யானைகள் கூட்டமாகக் குடியிருப்பு பகுதிகளுக்கு அண்மையில் வரத் தொடங்கியுள்ளன.கந்தளாய் பிரதேசத்தின் ஜயந்திபுரம் மற்றும் சூரியபுரம் பகுதிகளில் அண்மைய நாட்களில் பல காட்டு யானைகள் கூட்டமாகக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதுடன், இரவு நேரங்களில் அவதானத்துடன் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கந்தளாய் – சேருவில பிரதான வீதியின் சித்தாறு பகுதியில் இலட்சக்கணக்கான பறவைகள் திரண்டுள்ளமை இயற்கை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது.திருகோணமலை மாவட்டத்தை பாதித்துள்ள கடும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றிவருவதால், நீர் மற்றும் உணவைத் தேடி வனவிலங்குகள் மற்றும் பறவைகள் இடம்பெயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.வறட்சி நிலைமை மேலும் தீவிரமடைந்தால் மனிதர் – வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.