அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட், தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்க செனட் சபை, டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்தவராக ஜோ கேன்டை இந்த பதவிக்கு உறுதிப்படுத்தியது.
ஈரானில் நடந்து வரும் போரை என்னால் மனசாட்சி உறுத்தாமல் ஆதரிக்க முடியாது. ஈரான் நமது நாட்டிற்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.
மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது.
2016, 2020, 2024 தேர்தல்களில் நீங்கள் முன்வைத்த வெளிநாட்டு கொள்கைகளையும் மதிப்புக்களையும் நான் ஆதரிக்கிறேன்.
2025 ஜூன் மாதம் வரை, மத்திய கிழக்கு போர்கள் அமெரிக்காவின் உயிர்களையும் செல்வத்தையும் வீணாக்கும் சதியாகும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள்.
11 முறை போரில் பங்கேற்ற ஒரு முன்னாள் இராணுவ வீரராகவும், இஸ்ரேல் உருவாக்கியதாக நான் நம்பும் ஒரு போரில் என் மனைவி ஷானனை இழந்த கணவராகவும், அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் அளிக்காத இந்த போரில் அடுத்த தலைமுறையை அனுப்பி அவர்களின் உயிர்களை இழக்கச் செய்வதை நான் ஆதரிக்க முடியாது என அவர் தனது பதவி விலகலுக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்
ஈரான் போருக்கு எதிர்ப்பு; அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி இராஜினாமா அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட், தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.கடந்த ஜூலை மாதம், அமெரிக்க செனட் சபை, டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்தவராக ஜோ கேன்டை இந்த பதவிக்கு உறுதிப்படுத்தியது.ஈரானில் நடந்து வரும் போரை என்னால் மனசாட்சி உறுத்தாமல் ஆதரிக்க முடியாது. ஈரான் நமது நாட்டிற்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது.2016, 2020, 2024 தேர்தல்களில் நீங்கள் முன்வைத்த வெளிநாட்டு கொள்கைகளையும் மதிப்புக்களையும் நான் ஆதரிக்கிறேன்.2025 ஜூன் மாதம் வரை, மத்திய கிழக்கு போர்கள் அமெரிக்காவின் உயிர்களையும் செல்வத்தையும் வீணாக்கும் சதியாகும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள்.11 முறை போரில் பங்கேற்ற ஒரு முன்னாள் இராணுவ வீரராகவும், இஸ்ரேல் உருவாக்கியதாக நான் நம்பும் ஒரு போரில் என் மனைவி ஷானனை இழந்த கணவராகவும், அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் அளிக்காத இந்த போரில் அடுத்த தலைமுறையை அனுப்பி அவர்களின் உயிர்களை இழக்கச் செய்வதை நான் ஆதரிக்க முடியாது என அவர் தனது பதவி விலகலுக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்