• Oct 17 2026

நாடு முழுவதும் மின் தடை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 இயந்திரங்களும் செயலிழப்பு!

dorin / Oct 17th 2026, 3:01 pm
image

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் முற்றாக செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (17) காலை திடீரென ஏற்பட்ட தேசிய மின் கட்டமைப்புத் தடையைத் தொடர்ந்து இந்த அவசர நிலை உருவாகியுள்ளது. 

இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


நாடு முழுவதும் மின் தடை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 இயந்திரங்களும் செயலிழப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் முற்றாக செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று (17) காலை திடீரென ஏற்பட்ட தேசிய மின் கட்டமைப்புத் தடையைத் தொடர்ந்து இந்த அவசர நிலை உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement