• Oct 28 2026

இலங்கையில் மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து – 79 பேர் பலி! 28 பகுதிகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு!

Chithra / Oct 27th 2026, 11:15 am
image


இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 105,097 ஆக உயர்வடைந்துள்ளது.


அத்துடன், டெங்கு நோய்த்தாக்கம் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.


நாட்டிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் 54,673 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.02 சதவீதமாகும்.


மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 22,053 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 20,384 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 8,378 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,592 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.


இதனிடையே, ஒக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 4,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அகற்றுவதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இலங்கையில் மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து – 79 பேர் பலி 28 பகுதிகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 105,097 ஆக உயர்வடைந்துள்ளது.அத்துடன், டெங்கு நோய்த்தாக்கம் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.நாட்டிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் 54,673 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.02 சதவீதமாகும்.மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த மாவட்டத்தில் இதுவரை 22,053 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 20,384 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 8,378 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,592 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.இதனிடையே, ஒக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 4,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அகற்றுவதில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement