• Aug 05 2025

பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பில் 26,000 பேர் சோதனை; 748 பேர் க‍ைது!

Chithra / Aug 4th 2025, 1:28 pm
image


நாடளாவிய ரீதியாக நேற்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம் 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 25,870 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 23 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதேநேரத்தில் நிலுவையில் உள்ள பிடியாணையுடன் கூடிய 371 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 110  பேர், முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்திய 25  பேர் உட்பட  பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,202 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பில் 26,000 பேர் சோதனை; 748 பேர் க‍ைது நாடளாவிய ரீதியாக நேற்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம் 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 25,870 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 23 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.அதேநேரத்தில் நிலுவையில் உள்ள பிடியாணையுடன் கூடிய 371 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 110  பேர், முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்திய 25  பேர் உட்பட  பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,202 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement