சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு பம்பலப்பிட்டி சென்.பீட்டர்ஸ் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,
கைதுசெய்யப்பட்டவர் 37 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஆவார்.
சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜை போதைப்பொருளுடன் கைது சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு பம்பலப்பிட்டி சென்.பீட்டர்ஸ் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை 50 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டவர் 37 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஆவார்.சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.