• Apr 17 2026

கடன் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஜனாதிபதியுடன் ஐ.எம்.எவ். முக்கிய பேச்சு

Chithra / Apr 2nd 2026, 7:07 pm
image

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய அரசின் நிதி முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரம் முன்னைய நிலையை விட அதிக தாங்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலை மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார். 

இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

தற்போது எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக் கொள்வதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் எஞ்சிய இலக்குகளை அடைவதற்கான எதிர்கால நகர்வுகள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் ஈவான் பாபஜோர்ஜியு தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசின் சார்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


கடன் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஜனாதிபதியுடன் ஐ.எம்.எவ். முக்கிய பேச்சு சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய அரசின் நிதி முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரம் முன்னைய நிலையை விட அதிக தாங்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலை மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார். இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.தற்போது எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக் கொள்வதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் எஞ்சிய இலக்குகளை அடைவதற்கான எதிர்கால நகர்வுகள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் ஈவான் பாபஜோர்ஜியு தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.இலங்கை அரசின் சார்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement