• Apr 17 2026

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு முறையில் மாற்றம்!

Chithra / Apr 2nd 2026, 7:12 pm
image

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவுகளைக் கணக்கிடும் முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.


தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சரவையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


நிதியமைச்சு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டல்களின் படி, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் இனி 2026 மார்ச் 01 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.


எரிபொருள் அளவுகளுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளும் இதே அடிப்படை விலையைப் பயன்படுத்தியே மீளக் கணக்கிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அனைத்து அரச திணைக்களங்களும் நிறுவனங்களும் தற்போதைய சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க, இந்த மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


 

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு முறையில் மாற்றம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவுகளைக் கணக்கிடும் முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சரவையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டல்களின் படி, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் இனி 2026 மார்ச் 01 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.எரிபொருள் அளவுகளுடன் தொடர்புடைய ஏனைய கொடுப்பனவுகளும் இதே அடிப்படை விலையைப் பயன்படுத்தியே மீளக் கணக்கிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து அரச திணைக்களங்களும் நிறுவனங்களும் தற்போதைய சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க, இந்த மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement