இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளும் "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளதுடன் அனைத்து வகையான விமானங்களும் பறப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையகம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா- பாக்கிஸ்தான் இடையே உடனடி போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் நடவடிக்கை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளும் "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.இதேவேளை, பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளதுடன் அனைத்து வகையான விமானங்களும் பறப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையகம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.