'டித்வா' புயலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியால் தொலைகாட்சி நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புயலினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்து, அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வைத் தள்ளிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருட இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 8 பில்லியன் டொலர் எல்லையை எட்ட வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
'டித்வா' புயல் காரணமாக IMF இலக்குகளில் திருத்தம் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் 'டித்வா' புயலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தனியால் தொலைகாட்சி நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். இது தொடர்பான பேச்சுவார்த்தை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புயலினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்து, அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வைத் தள்ளிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இதேவேளை, இந்த வருட இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 8 பில்லியன் டொலர் எல்லையை எட்ட வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.