• Jan 13 2026

கல்வி மறுசீரமைப்பு சர்ச்சை; உடனடி தீர்வு இல்லாவிடின் போராட்டம் வெடிக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கம்!

shanuja / Jan 13th 2026, 9:57 am
image

 


புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முறையான தீர்வை வழங்க விரைந்து தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கல்வி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.


இதற்கிடையில், கல்வி மறுசீரமைப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்ட அமைப்பு நேற்று முன்தினம் கிரிபத்கொடையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புக்கு கீழான பாடத்தொகுதிகளில் மாணவர்களுக்கு பொருத்தமற்ற இணையதள முகவரிகள் மற்றும் எழுத்துப்பிழைகள் இருப்பதாகவும் இந்தச் செயற்பாடுகள் பொருத்தமற்றவை என்றும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை முன்னிறுத்தி வருகின்றனர்.


இருந்தபோதும், இந்தப் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேற்று (12) அவர்களின் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள்.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘‘போலியாக இந்தக் கல்வி மறுசீரமைப்பு எங்களுக்குரியது. இதனை நாங்கள் எவ்வாறாவது நிறைவேற்றுவோம் என்று ஆணவத்தில் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. 


அதன் காரணமாக இந்த செயற்பாட்டுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சங்கம், மக்கள் என சகலரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். புத்தகத்திலுள்ள இணையத்தள முகவரி மாத்திரமல்ல இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்பு செயற்பாட்டிலும் பாரிய சிக்கல் இருக்கிறது’’ என்றார்.


இதேவேளை, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பஞ்ஞாசேக தேரர் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘ஆசிரியர் அதிபர் சங்கம் என்ற அடிப்படையில் கல்வி அமைச்சரை சூழவிருப்பவர்களினூடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது என்பதால் கல்வி அமைச்சரின் கவனத்தை திசைத் திருப்பியுள்ளதால் நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளோம். நாளை (இன்று) அவரை சந்தித்து கலந்துரையாடி அவரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு நாங்கள் அடுத்தக்கட்ட தீர்மானங்களை எடுப்போம்’’ என்றார்.


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேள னத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், ‘‘அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொத்த பாடத் தொகுதியிலுமுள்ள ஒவ்வொரு தொகுதிகளில் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன.


பாடத்தொகுதியிலுள்ள உள்ளக விடயப் பரப்புகள், பாடத் தொகுதிகளை நிர்மாணித்துள்ள விதத்தை எடுத்துக்கொண்டால் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, கல்வி மறுசீரமைப்பு இந்த முறையில் முன்னெடுக்க முடியாது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் சரியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு கலந்துரையாடி நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டும்.


இந்த வாரத்துக்கு இதுதொடர்பில் அரசாங்கம் தீர்மானமொன்றை முன்னெடுக்கவில்லையென்றால், அடுத்த வாரத்தில் கல்வியுடன் தொடர்புடைய சகல தரப்புகளையும் இணைத்துக்கொண்டு அடுத்த வாரத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்போம்’’ என்று சுட்டிக்காட்டினார்.

கல்வி மறுசீரமைப்பு சர்ச்சை; உடனடி தீர்வு இல்லாவிடின் போராட்டம் வெடிக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கம்  புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முறையான தீர்வை வழங்க விரைந்து தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கல்வி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.இதற்கிடையில், கல்வி மறுசீரமைப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்ட அமைப்பு நேற்று முன்தினம் கிரிபத்கொடையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புக்கு கீழான பாடத்தொகுதிகளில் மாணவர்களுக்கு பொருத்தமற்ற இணையதள முகவரிகள் மற்றும் எழுத்துப்பிழைகள் இருப்பதாகவும் இந்தச் செயற்பாடுகள் பொருத்தமற்றவை என்றும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை முன்னிறுத்தி வருகின்றனர்.இருந்தபோதும், இந்தப் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நேற்று (12) அவர்களின் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘‘போலியாக இந்தக் கல்வி மறுசீரமைப்பு எங்களுக்குரியது. இதனை நாங்கள் எவ்வாறாவது நிறைவேற்றுவோம் என்று ஆணவத்தில் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அதன் காரணமாக இந்த செயற்பாட்டுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சங்கம், மக்கள் என சகலரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். புத்தகத்திலுள்ள இணையத்தள முகவரி மாத்திரமல்ல இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்பு செயற்பாட்டிலும் பாரிய சிக்கல் இருக்கிறது’’ என்றார்.இதேவேளை, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பஞ்ஞாசேக தேரர் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘ஆசிரியர் அதிபர் சங்கம் என்ற அடிப்படையில் கல்வி அமைச்சரை சூழவிருப்பவர்களினூடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது என்பதால் கல்வி அமைச்சரின் கவனத்தை திசைத் திருப்பியுள்ளதால் நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளோம். நாளை (இன்று) அவரை சந்தித்து கலந்துரையாடி அவரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு நாங்கள் அடுத்தக்கட்ட தீர்மானங்களை எடுப்போம்’’ என்றார்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேள னத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், ‘‘அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொத்த பாடத் தொகுதியிலுமுள்ள ஒவ்வொரு தொகுதிகளில் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன.பாடத்தொகுதியிலுள்ள உள்ளக விடயப் பரப்புகள், பாடத் தொகுதிகளை நிர்மாணித்துள்ள விதத்தை எடுத்துக்கொண்டால் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, கல்வி மறுசீரமைப்பு இந்த முறையில் முன்னெடுக்க முடியாது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் சரியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு கலந்துரையாடி நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டும்.இந்த வாரத்துக்கு இதுதொடர்பில் அரசாங்கம் தீர்மானமொன்றை முன்னெடுக்கவில்லையென்றால், அடுத்த வாரத்தில் கல்வியுடன் தொடர்புடைய சகல தரப்புகளையும் இணைத்துக்கொண்டு அடுத்த வாரத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்போம்’’ என்று சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement