• Apr 23 2026

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Feb 23rd 2026, 10:29 am
image


நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது.


இன்று  காலை முதல் நுவரெலியா பகுதிகளில் புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


பிரதான வீதிகளின் பயணிக்கும் வாகனங்கள் மெதுவாகவும், முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அதிகாலை வேளையில் தலைநகர் கொழும்புக்கு செல்லும் பேருந்துகள் கண்டிக்கு செல்லும் பேருந்துகள் கதிர்காமம் செல்லும் பேருந்து மற்றும் சிவனடிபாதமலைக்கு வந்து செல்லும் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.


நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டுள்ளது.இன்று  காலை முதல் நுவரெலியா பகுதிகளில் புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.பிரதான வீதிகளின் பயணிக்கும் வாகனங்கள் மெதுவாகவும், முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.அதிகாலை வேளையில் தலைநகர் கொழும்புக்கு செல்லும் பேருந்துகள் கண்டிக்கு செல்லும் பேருந்துகள் கதிர்காமம் செல்லும் பேருந்து மற்றும் சிவனடிபாதமலைக்கு வந்து செல்லும் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement