• May 14 2026

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

shanu / May 14th 2026, 2:41 pm
image

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ம் திகதி காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது.


இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.


குறிப்பாக மேல் கொத்மலை லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர கென்யோன் புரோட்லேன்ட் ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.


அத்துடன் மவுசாக்கலை காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 39 அடியும் 28 அடி நிறைய உள்ளன.


கன மழை பெய்து வருவதால் காட்மோர் ஓயா மரே ஓயா சியத்தலகங்குல ஓயா சாமிமலை ஓயா என்பன வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.


 அத்துடன் மறே நீர் வீழ்ச்சி காட்மோர் நீர் வீழ்ச்சி மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மற்றும் லக்சபான நீர் வீழ்ச்சி ஆகிய வற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


மேலும் கன மழை பெய்து வரும் வேளையில் காட்டாறு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஆறுகளில் நீராட வேண்டாம் என கேட்டுக் கொள்ள படுகின்றனர்.


மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பணி மூட்டம் நிலவுகிறது இதன் காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் கண்டி பிரதான வீதியிலும் ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியிலும் மற்றும் மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியிலும் அதிக அளவில் பணி மூட்டம் நிலவுகிறது அத்துடன் கன மழை பெய்து வருகிறது வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.


வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நுவரெலியாவில் தொடரும் கனமழை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ம் திகதி காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக மேல் கொத்மலை லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர கென்யோன் புரோட்லேன்ட் ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.அத்துடன் மவுசாக்கலை காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 39 அடியும் 28 அடி நிறைய உள்ளன.கன மழை பெய்து வருவதால் காட்மோர் ஓயா மரே ஓயா சியத்தலகங்குல ஓயா சாமிமலை ஓயா என்பன வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மறே நீர் வீழ்ச்சி காட்மோர் நீர் வீழ்ச்சி மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மற்றும் லக்சபான நீர் வீழ்ச்சி ஆகிய வற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும் கன மழை பெய்து வரும் வேளையில் காட்டாறு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஆறுகளில் நீராட வேண்டாம் என கேட்டுக் கொள்ள படுகின்றனர்.மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பணி மூட்டம் நிலவுகிறது இதன் காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் கண்டி பிரதான வீதியிலும் ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியிலும் மற்றும் மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியிலும் அதிக அளவில் பணி மூட்டம் நிலவுகிறது அத்துடன் கன மழை பெய்து வருகிறது வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்.வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement