• May 14 2026

கடும் மழை காரணமாக புத்தளத்தில் 27222 பேர் பாதிப்பு!

shanu / May 14th 2026, 2:50 pm
image

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 7206 குடும்பங்களைச் சேர்ந்த 27222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


தொடர்ச்சியாக  பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவில் 22  கிராம சேவகர் பிரிவில் 7206 குடும்பங்களை சேர்ந்த 27222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், ஆனமடுவ மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 19 கிராம சேவகர் பிரிவில் 7190 குடும்பங்களைச் சேர்ந்த 27178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 39 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளானர்.


அத்தோடு, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.


அத்துடன், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு , சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பனவும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.


இதேவேளை, சீரற்ற காலநிலை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி , ரத்மல்யாய பகுதிகளில் பிரதான வீதியில் வெள்ளநீர் மேவிப் பாய்வதால் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்தன.


மேலும், புத்தளம் தள வைத்தியசாலை , புத்தளம் மாவட்ட பி்திப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் உட்டபட அரச பாடசாலைகள், அரச திணைக்களங்கள் என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் மழை காரணமாக புத்தளத்தில் 27222 பேர் பாதிப்பு கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 7206 குடும்பங்களைச் சேர்ந்த 27222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக  பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவில் 22  கிராம சேவகர் பிரிவில் 7206 குடும்பங்களை சேர்ந்த 27222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், ஆனமடுவ மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 19 கிராம சேவகர் பிரிவில் 7190 குடும்பங்களைச் சேர்ந்த 27178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 39 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளானர்.அத்தோடு, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.அத்துடன், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு தேவையான சமைத்த உணவு , சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பனவும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.இதேவேளை, சீரற்ற காலநிலை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி , ரத்மல்யாய பகுதிகளில் பிரதான வீதியில் வெள்ளநீர் மேவிப் பாய்வதால் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்தன.மேலும், புத்தளம் தள வைத்தியசாலை , புத்தளம் மாவட்ட பி்திப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் உட்டபட அரச பாடசாலைகள், அரச திணைக்களங்கள் என்பனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement