• Jul 19 2025

பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thansita / Jul 19th 2025, 10:54 am
image

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது 

மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் 

மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

இதேவேளை, புத்தளம்–கொழும்பு–மாத்தறை கடற்கரை வழித்தடத்தில் மழை வாய்ப்பு அதிகம். கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 35–45 கி.மீ. வரை இருக்கும் என்றும், மேற்கு–தென்மேற்கு திசையிலிருந்து வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்இ காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக வாகரை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

எனவே புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இதனால் மீனவர்களுக்கும் கடலில் பயணம் செய்வோருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது


பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.இதேவேளை, புத்தளம்–கொழும்பு–மாத்தறை கடற்கரை வழித்தடத்தில் மழை வாய்ப்பு அதிகம். கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 35–45 கி.மீ. வரை இருக்கும் என்றும், மேற்கு–தென்மேற்கு திசையிலிருந்து வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்இ காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக வாகரை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் மீனவர்களுக்கும் கடலில் பயணம் செய்வோருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement