• Jul 17 2025

ஆளும்கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல்; இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

Chithra / Jul 16th 2025, 8:36 am
image

வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளனர். 

இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பையும் பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள போதும், அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளும்கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல்; இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பையும் பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள போதும், அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement