வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு, தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து 18 ஆம் திகதி வடக்கு - கிழக்கில் கடையடைப்பு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை (16) மாலை திருகோணமலை 3 ஆம் கட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ்குமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர் அப்துல் லத்தீப் பஷீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வீதிகள், கடைகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு - கிழக்கில் பூரண ஹர்த்தால்; ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம் வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு, தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து 18 ஆம் திகதி வடக்கு - கிழக்கில் கடையடைப்பு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.இந்த நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை (16) மாலை திருகோணமலை 3 ஆம் கட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.இதில் திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ்குமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர் அப்துல் லத்தீப் பஷீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வீதிகள், கடைகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.