கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுமார் நான்கு தசாப்தங்களாக அளப்பெரிய சேவை புரிந்த ஊழியர் ஒருவர் விடைபெற்ற தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நான்கு தசாப்தங்களாக அதவாது 41 வருடங்களாக கல்விசாரா ஊழியராக சந்தியா தேவராசா என்பவர் பணிபுரிந்துள்ளார்.
கலாசாலையில் தனது சேவையை நிறைவுசெய்து அவர் வெளியேறுகையில் கலாசாலையில் கண்ணீர் கலந்த தருணம் பதிவாகியது.
குறித்த ஊழியர் தான் விடைபெறுவதை சக ஊழியர்களிடம் தெரிவித்து கலாசாலையை விட்டு வெளியேறும் காட்சி நெகிழ வைத்துள்ளது.
அவரது கச ஊழியர்களும் கலாசாலை அதிகாரிகளும் கண்ணீர் கலந்த கவலையுடன் அவரது சேவையை பாராட்டி அவரை விடைபெறச் செய்தனர்.
விடைபெற்றுச் செல்லும் கல்விசாரா ஊழியரான சந்தியா தேவராசா கலாசாலையில் கடந்த 41 வருடகாலமாக ஆற்றிய சேவை அளப்பெரிய விலை மதிக்க முடியாத சேவையாகும் என்று சக ஊழியர்கள் பதிவிட்டுள்ளனர்.
சக ஊழியர்களுடனும் அதிகாரிகளுடன் அவரது நடத்தைகள், பழக்கவழக்கங்கள் போற்றத்தக்கதாகும். மிகவும் அன்புடன் அக்கறையுடன் 41 வருட காலம் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் ஊழியருக்கு கலாசாலை சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
தனது சேவையை மனநிறைவோடு ஆற்றி அகமகிழ்வோடு ஊழியர் விடை பெற்றுச்செல்லும் தருணம் கலாசாலையை ஒரு நிமிடம் சோகத்தில் ஆழ்த்தியது எனலாம்.
நான்கு தசாப்தங்கள் அளப்பெரிய சேவை; கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஊழியர் விடைபெற்ற தருணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுமார் நான்கு தசாப்தங்களாக அளப்பெரிய சேவை புரிந்த ஊழியர் ஒருவர் விடைபெற்ற தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நான்கு தசாப்தங்களாக அதவாது 41 வருடங்களாக கல்விசாரா ஊழியராக சந்தியா தேவராசா என்பவர் பணிபுரிந்துள்ளார். கலாசாலையில் தனது சேவையை நிறைவுசெய்து அவர் வெளியேறுகையில் கலாசாலையில் கண்ணீர் கலந்த தருணம் பதிவாகியது. குறித்த ஊழியர் தான் விடைபெறுவதை சக ஊழியர்களிடம் தெரிவித்து கலாசாலையை விட்டு வெளியேறும் காட்சி நெகிழ வைத்துள்ளது. அவரது கச ஊழியர்களும் கலாசாலை அதிகாரிகளும் கண்ணீர் கலந்த கவலையுடன் அவரது சேவையை பாராட்டி அவரை விடைபெறச் செய்தனர்.விடைபெற்றுச் செல்லும் கல்விசாரா ஊழியரான சந்தியா தேவராசா கலாசாலையில் கடந்த 41 வருடகாலமாக ஆற்றிய சேவை அளப்பெரிய விலை மதிக்க முடியாத சேவையாகும் என்று சக ஊழியர்கள் பதிவிட்டுள்ளனர். சக ஊழியர்களுடனும் அதிகாரிகளுடன் அவரது நடத்தைகள், பழக்கவழக்கங்கள் போற்றத்தக்கதாகும். மிகவும் அன்புடன் அக்கறையுடன் 41 வருட காலம் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் ஊழியருக்கு கலாசாலை சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தனது சேவையை மனநிறைவோடு ஆற்றி அகமகிழ்வோடு ஊழியர் விடை பெற்றுச்செல்லும் தருணம் கலாசாலையை ஒரு நிமிடம் சோகத்தில் ஆழ்த்தியது எனலாம்.