• Jul 08 2026

நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு! 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

Chithra / Jul 8th 2026, 12:20 pm
image


இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. 


இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,835 ஆகும் என அந்த பிரிவின் பதில் பணிப்பாளர், வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த  வைத்தியர் கபில கன்னங்கர, 


மேல் மாகாணத்தில் கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அதிகளவில் அடையாளங்காணப்பட்டுள்ளன. 


எனவே, இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, டெங்குவை முழுமையாக ஒழிப்பதற்காக நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து, சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என  வலியுறுத்தினார்.


மழைக்கால நிலையைத் தொடர்ந்து டெங்கு பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்கள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சூழவுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத் துறையினர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதேவேளை  கண்டி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு அதி ஆபத்தான வலயங்களாக  07  வட்டாரங்கள்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 


கண்டி மாநகர சபை எல்லைக்குள் 590 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன்,  04 மரணங்கள் சம்பவித்துள்ளன. இதனை அடுத்து தொடர்புடைய ஏழு பிரிவுகள் அதி அபாய பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன. இப்பகுதிகளில்  நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநகர சபை தீவிரப்படுத்தி வருகிறது.


சுகாதாரப் பிரிவினர் ஏற்கனவே டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, நகர்ப்புற மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கண்டி மாநகர  பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிஷாந்த மாசாச்சி குறிப்பிட்டார்.  


இதேவேளை  மொத்த நோயாளர்களில் 52.51 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.


மாவட்ட ரீதியாக அவதானிக்கும்போது, கொழும்பு மாவட்டம் 12,863 நோயாளர்களுடன் முதலிடத்திலும், கம்பஹா மாவட்டம் 12,582 நோயாளர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

 

மேலும், இந்த ஆபத்தான சூழ்நிலையில், நாடளாவிய ரீதியில் 142 சுகாதார அதிகாரி பிரிவுகள் அதி-அவதானம் மிக்க பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,835 ஆகும் என அந்த பிரிவின் பதில் பணிப்பாளர், வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த  வைத்தியர் கபில கன்னங்கர, மேல் மாகாணத்தில் கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அதிகளவில் அடையாளங்காணப்பட்டுள்ளன. எனவே, இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, டெங்குவை முழுமையாக ஒழிப்பதற்காக நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து, சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என  வலியுறுத்தினார்.மழைக்கால நிலையைத் தொடர்ந்து டெங்கு பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்கள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சூழவுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத் துறையினர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.இதேவேளை  கண்டி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு அதி ஆபத்தான வலயங்களாக  07  வட்டாரங்கள்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கண்டி மாநகர சபை எல்லைக்குள் 590 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன்,  04 மரணங்கள் சம்பவித்துள்ளன. இதனை அடுத்து தொடர்புடைய ஏழு பிரிவுகள் அதி அபாய பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன. இப்பகுதிகளில்  நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநகர சபை தீவிரப்படுத்தி வருகிறது.சுகாதாரப் பிரிவினர் ஏற்கனவே டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, நகர்ப்புற மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கண்டி மாநகர  பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிஷாந்த மாசாச்சி குறிப்பிட்டார்.  இதேவேளை  மொத்த நோயாளர்களில் 52.51 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.மாவட்ட ரீதியாக அவதானிக்கும்போது, கொழும்பு மாவட்டம் 12,863 நோயாளர்களுடன் முதலிடத்திலும், கம்பஹா மாவட்டம் 12,582 நோயாளர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.  மேலும், இந்த ஆபத்தான சூழ்நிலையில், நாடளாவிய ரீதியில் 142 சுகாதார அதிகாரி பிரிவுகள் அதி-அவதானம் மிக்க பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement