• Jul 14 2026

போதைப்பொருளுடன் ஓய்வுபெற்ற அதிபர், பல்கலைக்கழக மாணவன் கைது!

Chithra / Jul 13th 2026, 10:23 am
image

    

 

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார். இவர் நீண்டகாலமாக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே, மேற்படி மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபராவார்.இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

போதைப்பொருளுடன் ஓய்வுபெற்ற அதிபர், பல்கலைக்கழக மாணவன் கைது      கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார். இவர் நீண்டகாலமாக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே, மேற்படி மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபராவார்.இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

Advertisement

Advertisement

Advertisement