• Aug 11 2025

டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்; தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் தரையிறக்கம்!

shanuja / Aug 11th 2025, 12:43 pm
image

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் தரையிறக்கப்பட்டது. 


ஏர் இந்தியா விமானமொன்று திருவனந்தபுரத்தில் இருந்து  நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டது. 

எனினும் புறப்பட்ட சில நேரங்களில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 


தொழில்நுட்பக் கோளாறை இனங்கண்ட அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சென்னைக்குத் திருப்பி அனுப்பினர். 


பின்னர் விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 


விமானத்தில்  நான்கு கேரள எம்.பி.க்கள் உட்பட பலர் பயணித்துள்ளனர். விமானத்தில் எற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 


உலகை உலுக்கிய குஜராத் அகமதாபாத் விமான விபத்திற்குப் பின்னர்  ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகளிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்; தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் தரையிறக்கம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானமொன்று திருவனந்தபுரத்தில் இருந்து  நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டது. எனினும் புறப்பட்ட சில நேரங்களில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறை இனங்கண்ட அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சென்னைக்குத் திருப்பி அனுப்பினர். பின்னர் விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில்  நான்கு கேரள எம்.பி.க்கள் உட்பட பலர் பயணித்துள்ளனர். விமானத்தில் எற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. உலகை உலுக்கிய குஜராத் அகமதாபாத் விமான விபத்திற்குப் பின்னர்  ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகளிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement