• Jul 15 2025

முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மனுதாக்கல்

Chithra / Jul 14th 2025, 12:25 pm
image


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

மனுவை பரிசீலித்த பின்னர், எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் ஒன்றை அனுப்புமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.

அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் ராஜித சேனாரட்ன செயற்பட்டதாகத் தெரிவித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 


முன் பிணை கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மனுதாக்கல் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவை பரிசீலித்த பின்னர், எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் ஒன்றை அனுப்புமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் ராஜித சேனாரட்ன செயற்பட்டதாகத் தெரிவித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement