• Oct 29 2026

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கைது!

Chithra / Oct 28th 2026, 7:41 am
image


இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறைவு செய்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (26) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரை, அங்கு தயார் நிலையில் இருந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கடந்த 2015ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


இதனையடுத்து, இந்திய நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


குறித்த சிறைத்தண்டனைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


அதற்கமைய, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் உளவுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்காக அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.


சந்தேகநபரின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கைது இந்தியாவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறைவு செய்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (26) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரை, அங்கு தயார் நிலையில் இருந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கடந்த 2015ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.இதனையடுத்து, இந்திய நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.குறித்த சிறைத்தண்டனைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்கமைய, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் உளவுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.சந்தேகநபரின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement