• Apr 30 2026

வரலாற்றில் முதன்முறையாக 5,500 டொலர்களைக் கடந்தது தங்க விலை

Chithra / Jan 29th 2026, 10:47 am
image

 சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. 

 

இன்று காலை வர்த்தக நேரத்தின் போது இந்த அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. 


கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

 

அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள் குறிப்பாக அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் போக்கு மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

வரலாற்றில் முதன்முறையாக 5,500 டொலர்களைக் கடந்தது தங்க விலை  சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.  இன்று காலை வர்த்தக நேரத்தின் போது இந்த அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள் குறிப்பாக அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் போக்கு மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement