• Sep 03 2025

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

Chithra / Sep 3rd 2025, 11:51 am
image

 

இரத்தினபுரியில் பேருந்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பெல்மடுல்ல, கனேகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான 32 வயதான மதுபாஷினி என்பவரே உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தனது பணி நேரத்தை முடித்துவிட்டு மருத்துவர் இரத்தினபுரியிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து பெல்மடுல்லவை அடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முன் கதவிற்கு நடந்து சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு  இரத்தினபுரியில் பேருந்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.பெல்மடுல்ல, கனேகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான 32 வயதான மதுபாஷினி என்பவரே உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தனது பணி நேரத்தை முடித்துவிட்டு மருத்துவர் இரத்தினபுரியிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேருந்து பெல்மடுல்லவை அடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முன் கதவிற்கு நடந்து சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement