• Sep 02 2025

பிரபல ரெப் பாடகர் 'மதுவா' மீண்டும் வெடிப்பொருட்களுடன் கைது!

Chithra / Sep 2nd 2025, 2:21 pm
image

 

சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் மாதவ பிரசாத், மீண்டும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய  பிரபல ரெப் பாடகர் மாதவ பிரசாத், 'மதுவா' என்ற இளைஞராவார்.

கஹத்துடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் பிட்டிபன, கலஹேன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் வெடிபொருட்களை புதைத்து வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன்போது,  3 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3 கிலோகிராமும் 500 கிராம் அளவிலான அமோனியா நைதரசன் இரசாயனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.


பிரபல ரெப் பாடகர் 'மதுவா' மீண்டும் வெடிப்பொருட்களுடன் கைது  சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் மாதவ பிரசாத், மீண்டும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய  பிரபல ரெப் பாடகர் மாதவ பிரசாத், 'மதுவா' என்ற இளைஞராவார்.கஹத்துடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் பிட்டிபன, கலஹேன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் வெடிபொருட்களை புதைத்து வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.இதன்போது,  3 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3 கிலோகிராமும் 500 கிராம் அளவிலான அமோனியா நைதரசன் இரசாயனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement