• May 13 2025

வவுனியாவில் காணாமல் போன தந்தை: பிள்ளைகள் விடுத்த கோரிக்கை..!

Sharmi / May 13th 2025, 12:24 pm
image

மன்னாரிலிருந்து வவுனியாவுக்கு உறவினரின் இறுதி நிகழ்வுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தவசிக்குளத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்வில் பங்கேற்பதற்காக மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் வவுனியா சென்று மீண்டும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியன்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மறுநாளான 21 ஆம் திகதி மீண்டும் வவுனியாவுக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் 22 ஆம் திகதி மனைவியுடன் இறுதியாக தொலைபேசியில் கதைத்துள்ளார்.

அதன்பின்னர் குறித்த குடும்பஸ்தரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து காணாமல் போன குடும்பஸ்தரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதியன்று காணாமல் போன குடும்பஸ்தரை வவுனியா நெளுங்குளத்தில் ஒருவர் கண்டுள்ளதாக அவரின் மகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பின்னர் காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் 24 ஆம் திகதியன்று குடும்பஸ்தர் காணாமல் போன சம்பவம் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

எனவே, குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0743022280 அல்லது 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வவுனியாவில் காணாமல் போன தந்தை: பிள்ளைகள் விடுத்த கோரிக்கை. மன்னாரிலிருந்து வவுனியாவுக்கு உறவினரின் இறுதி நிகழ்வுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா தவசிக்குளத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்வில் பங்கேற்பதற்காக மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் வவுனியா சென்று மீண்டும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியன்று வீடு திரும்பியுள்ளார்.இந்நிலையில் மறுநாளான 21 ஆம் திகதி மீண்டும் வவுனியாவுக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் 22 ஆம் திகதி மனைவியுடன் இறுதியாக தொலைபேசியில் கதைத்துள்ளார்.அதன்பின்னர் குறித்த குடும்பஸ்தரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறப்படுகின்றது.இதனையடுத்து காணாமல் போன குடும்பஸ்தரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர்.இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதியன்று காணாமல் போன குடும்பஸ்தரை வவுனியா நெளுங்குளத்தில் ஒருவர் கண்டுள்ளதாக அவரின் மகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன்பின்னர் காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் 24 ஆம் திகதியன்று குடும்பஸ்தர் காணாமல் போன சம்பவம் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0743022280 அல்லது 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement