• Jan 19 2026

பேருந்தின் கதவு திடீரென திறந்ததால் ஏற்பட்ட கோர விபத்து; சாரதி பலி - பலர் காயம்

Chithra / Jan 18th 2026, 9:32 am
image

 


கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச் சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.  


குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது. 


அந்த நேரத்தில் சாரதி அக் கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


காயமடைந்தவர்களில் பேருந்தின் நடத்துனர், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டுள்ளதுடன், அந்தத் தடையை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 


பேருந்தின் கதவு திடீரென திறந்ததால் ஏற்பட்ட கோர விபத்து; சாரதி பலி - பலர் காயம்  கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.  குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது. அந்த நேரத்தில் சாரதி அக் கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்தின் நடத்துனர், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டுள்ளதுடன், அந்தத் தடையை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

Advertisement

Advertisement

Advertisement