• Oct 15 2026

மரண தண்டனை தளர்த்தப்பட்டாலும் தீராத கவலை! அனோஜனின் குடும்பத்தினர் உருக்கம்

Chithra / Oct 14th 2026, 3:32 pm
image


சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பொறியாளர் சிவராசா அனோஜனின் மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ள போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே தமது குடும்பத்தினருக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.


கல்முனை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பான குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்தார்.


இந்நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி ஊடாகத் தமது குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.


அனோஜனின் மரண தண்டனை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து குடும்பத்தினரின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக எமது பிராந்திய ஊடகவியலாளர் , நற்பிட்டிமுனையிலுள்ள அவரது இல்லத்திற்கு இன்று (14) விஜயம் செய்திருந்தார்.


இதன்போது அனோஜனின் தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் வீட்டில் கூடியிருந்ததுடன், அவரது எதிர்காலம் குறித்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காணப்பட்டனர்.


ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனோஜனின் சகோதரர்,


"எனது அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி ஊடாக எமக்குத் தெரிவித்தார்.


இந்தத் தகவல் எமது குடும்பத்தினருக்கு ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி அண்ணனின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


அந்த விசாரணையின் முடிவுகள் வெளியான பின்னரே எமது குடும்பத்திற்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும்" எனத் தெரிவித்தார்.


அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் அவரது விடுதலையை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


அதேவேளை, மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள தகவல் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள போதிலும், வழக்கின் இறுதி முடிவு தொடர்பான எதிர்பார்ப்பு தொடர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



இந்நிலையில் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

இந்தத் தீர்மானம் அனோஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்து வந்த அனைத்து இலங்கையர்களுக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நிதானமான இராஜதந்திர அணுகுமுறை, நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதை மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைக்கு ஆதரவாகப் பாடுபட்டவர்களின் அயராத முயற்சிகள் ஆகியவற்றின் பெறுபேறாக இந்த முன்னேற்றம் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


இந்தத் தீர்வுக்காக சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சவவுதி அரேபியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.


எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதியளித்தார்.


மரண தண்டனை தளர்த்தப்பட்டாலும் தீராத கவலை அனோஜனின் குடும்பத்தினர் உருக்கம் சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பொறியாளர் சிவராசா அனோஜனின் மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ள போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே தமது குடும்பத்தினருக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.கல்முனை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பான குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்தார்.இந்நிலையில், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி ஊடாகத் தமது குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.அனோஜனின் மரண தண்டனை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து குடும்பத்தினரின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக எமது பிராந்திய ஊடகவியலாளர் , நற்பிட்டிமுனையிலுள்ள அவரது இல்லத்திற்கு இன்று (14) விஜயம் செய்திருந்தார்.இதன்போது அனோஜனின் தாய், தந்தை, சகோதரர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் வீட்டில் கூடியிருந்ததுடன், அவரது எதிர்காலம் குறித்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காணப்பட்டனர்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனோஜனின் சகோதரர்,"எனது அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி ஊடாக எமக்குத் தெரிவித்தார்.இந்தத் தகவல் எமது குடும்பத்தினருக்கு ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி அண்ணனின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.அந்த விசாரணையின் முடிவுகள் வெளியான பின்னரே எமது குடும்பத்திற்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும்" எனத் தெரிவித்தார்.அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் அவரது விடுதலையை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.அதேவேளை, மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள தகவல் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள போதிலும், வழக்கின் இறுதி முடிவு தொடர்பான எதிர்பார்ப்பு தொடர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் அனோஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்து வந்த அனைத்து இலங்கையர்களுக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நிதானமான இராஜதந்திர அணுகுமுறை, நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதை மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைக்கு ஆதரவாகப் பாடுபட்டவர்களின் அயராத முயற்சிகள் ஆகியவற்றின் பெறுபேறாக இந்த முன்னேற்றம் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.இந்தத் தீர்வுக்காக சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சவவுதி அரேபியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement