• Dec 09 2024

ஈரோஸ் ஜனநாயக முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல்!

Chithra / Oct 10th 2024, 12:14 pm
image

 

நாட்டில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேற்று மாலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  தாக்கல் செய்தது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின் சார்பில்  இணைந்து இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி சுப்பிரமணியம் காண்டீபன்  ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான்கு மாவட்டங்களில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி போட்டியிடவுள்ளதாகவும் தேர்தலில் ஒலிபெருக்கி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் முன்னணியின் செயலாளர்  தெரிவித்தார்.

அத்துடன்   பெருந் தோட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்ற சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்க விளங்கும் இளம் சமூகத்தினருக்கும் கட்சியின் சிரேஸ்ட  உறுப்பினர்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல்  நாட்டில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேற்று மாலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  தாக்கல் செய்தது.ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின் சார்பில்  இணைந்து இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி சுப்பிரமணியம் காண்டீபன்  ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான்கு மாவட்டங்களில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி போட்டியிடவுள்ளதாகவும் தேர்தலில் ஒலிபெருக்கி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் முன்னணியின் செயலாளர்  தெரிவித்தார்.அத்துடன்   பெருந் தோட்ட சமூகத்தில் இருந்து கல்வி கற்ற சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்க விளங்கும் இளம் சமூகத்தினருக்கும் கட்சியின் சிரேஸ்ட  உறுப்பினர்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement