• Jul 12 2025

மட்டக்களப்பின் சிறந்த வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வோம் - ஆளுங்கட்சி எம்.பி பிரபு உறுதி!

shanuja / Jul 12th 2025, 5:44 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.


மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 211ஆவது ஆண்டு நிறைவு பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சுற்றுப்போட்டி ஆரம்பமாகியுள்ளது.


மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 


பிரதம அதிதி உரையில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்குள்ள வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் தெரிவிக்கையில், 


கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு அரசுகள் முன்வராத நிலையில் அந்த செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பின் சிறந்த வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வோம் - ஆளுங்கட்சி எம்.பி பிரபு உறுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 211ஆவது ஆண்டு நிறைவு பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சுற்றுப்போட்டி ஆரம்பமாகியுள்ளது.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பிரதம அதிதி உரையில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்குள்ள வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு அரசுகள் முன்வராத நிலையில் அந்த செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement