• May 23 2026

கொழும்பு, கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மக்களுக்கான அவசர அறிவிப்பு!

Ziya / Nov 29th 2025, 5:46 pm
image

அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமைஅதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, அந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறாமல் இன்னும் வீடுகளிலேயே தங்கியிருக்கும் மக்கள், கூடிய விரைவில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான நிலையங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மக்களுக்கான அவசர அறிவிப்பு அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமைஅதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார். அதற்கமைய, அந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறாமல் இன்னும் வீடுகளிலேயே தங்கியிருக்கும் மக்கள், கூடிய விரைவில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான நிலையங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement