• Jan 16 2026

லண்டனா கள்ளிச்செடிகளால் உருவான யானை சிற்பங்கள்; மக்களைக் கவர்ந்த மெரினா கடற்கரை!

shanuja / Jan 13th 2026, 6:16 pm
image

தைப்பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில், பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், லண்டனா கள்ளிச்செடிகளால் உருவாக்கப்பட்ட யானை சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.


உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்று  கூறப்படும்  சென்னை மெரினா கடற்கரை, தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான  சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. 


மெரினாவுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். 

சென்னை மெரினா கடற்கரையில் பொங்கல் அன்று லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கம். 


இந்த நிலையில் நாளைமறுதினம் காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெற்றுள்ளது. 


காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மரத்திலாலான யானை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


யானை சிற்பங்களைப் பார்வையிட இப்போதே ஏராளமானோர் தமது குழந்தைகளை அழைத்துச் சென்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

லண்டனா கள்ளிச்செடிகளால் உருவான யானை சிற்பங்கள்; மக்களைக் கவர்ந்த மெரினா கடற்கரை தைப்பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில், பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், லண்டனா கள்ளிச்செடிகளால் உருவாக்கப்பட்ட யானை சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்று  கூறப்படும்  சென்னை மெரினா கடற்கரை, தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான  சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. மெரினாவுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் பொங்கல் அன்று லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கம். இந்த நிலையில் நாளைமறுதினம் காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெற்றுள்ளது. காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மரத்திலாலான யானை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.யானை சிற்பங்களைப் பார்வையிட இப்போதே ஏராளமானோர் தமது குழந்தைகளை அழைத்துச் சென்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement