புத்தளம் உடப்பு கடற்கரைப்பகுதிகளில் கடலரிப்பு மோசமடைந்துள்ளதால் குடியிருப்புக்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உடப்புப் பகுதியிலுள்ள கடலோரப் பகுதியானது அண்மைக் காலத்தில் மிகவும் மோசமான நிலையில் கடலரிப்பினால் பாதிப்படைந்துள்ளது.
இதனால் சிலவீடுகளும்,மீன் வாடிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மேலும் தென்மேல் பருவக்காற்று ஆரம்பித்தால் கடலரிப்பின் நிலை வலுவடைய வாய்ப்புள்ளது.
அத்துடன் இந்த நிலை தொடருமானால் அருகிலுள்ள ஆலயம் மற்றும் சில குடியிருப்புக்களும் காணாமல் போக வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தமது கிராமத்தைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டித்வா அனர்த்தத்தைத் தொடர்ந்து நிகழும் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களும் அச்சங்களும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோசமடையும் கடலரிப்பு; அழியும் நிலையில் குடியிருப்புக்கள் - கிராமத்தைக் காப்பாற்றுமாறு உடப்பு மக்கள் கோரிக்கை புத்தளம் உடப்பு கடற்கரைப்பகுதிகளில் கடலரிப்பு மோசமடைந்துள்ளதால் குடியிருப்புக்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உடப்புப் பகுதியிலுள்ள கடலோரப் பகுதியானது அண்மைக் காலத்தில் மிகவும் மோசமான நிலையில் கடலரிப்பினால் பாதிப்படைந்துள்ளது. இதனால் சிலவீடுகளும்,மீன் வாடிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மேலும் தென்மேல் பருவக்காற்று ஆரம்பித்தால் கடலரிப்பின் நிலை வலுவடைய வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த நிலை தொடருமானால் அருகிலுள்ள ஆலயம் மற்றும் சில குடியிருப்புக்களும் காணாமல் போக வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தமது கிராமத்தைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். டித்வா அனர்த்தத்தைத் தொடர்ந்து நிகழும் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களும் அச்சங்களும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.