• Jan 16 2026

வீரர்கள் மைதானத்தில் இறங்க மறுப்பு: பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டி புறக்கணிப்பு!

dileesiya / Jan 15th 2026, 3:58 pm
image

BPL தொடரின் முதல் போட்டியே வீரர்கள் மைதானத்தில் இறங்க மறுத்ததால் தாமதமானது. 

வியாழக்கிழமை சட்டோகிராம் ராயல்ஸ் மற்றும் நோகாலி எக்ஸ்பிரஸ் அணிகள் மோதவிருந்த இந்தப் போட்டி, உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், டாஸ் போட இரு அணிகளும் மைதானத்திற்கு வராததால் போட்டி தொடக்கம் தாமதமானது. போட்டி மதியம் 1 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

சட்டோகிராம் – நோகாலி போட்டியின் நடுவரான ஷிபார் அகமது, ESPNcricinfo-விடம் கூறுகையில்,

“நாங்கள் மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை. இதுகுறித்து BPL தொழில்நுட்பக் குழுவே தெளிவான தகவலை வழங்க முடியும்”என தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, வியாழக்கிழமை காலை டாக்கா கிரிக்கெட் லீக் போட்டிகளும் தொடங்கப்படவில்லை. வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கம், வீரர்கள் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடும் என நேற்று மாலை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


வீரர்கள் மைதானத்தில் இறங்க மறுப்பு: பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டி புறக்கணிப்பு BPL தொடரின் முதல் போட்டியே வீரர்கள் மைதானத்தில் இறங்க மறுத்ததால் தாமதமானது. வியாழக்கிழமை சட்டோகிராம் ராயல்ஸ் மற்றும் நோகாலி எக்ஸ்பிரஸ் அணிகள் மோதவிருந்த இந்தப் போட்டி, உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், டாஸ் போட இரு அணிகளும் மைதானத்திற்கு வராததால் போட்டி தொடக்கம் தாமதமானது. போட்டி மதியம் 1 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.சட்டோகிராம் – நோகாலி போட்டியின் நடுவரான ஷிபார் அகமது, ESPNcricinfo-விடம் கூறுகையில்,“நாங்கள் மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்பது எங்களுக்கே தெரியவில்லை. இதுகுறித்து BPL தொழில்நுட்பக் குழுவே தெளிவான தகவலை வழங்க முடியும்”என தெரிவித்தார்.இதற்கு முன்னதாக, வியாழக்கிழமை காலை டாக்கா கிரிக்கெட் லீக் போட்டிகளும் தொடங்கப்படவில்லை. வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கம், வீரர்கள் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடும் என நேற்று மாலை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement