நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் உடுமாங்கண்டு நாபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆட்சியில் இருக்கின்ற என்.பி.பி.அரசாங்கம், இழந்த பொருளாதாரம், சுகாதாரம், அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்களில் ஓரளவு சிரத்தை எடுத்து சேவையாற்றி வருகின்ற நிலையில், பிரதமர் ஹரிணிக்கு மற்றும் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசமப் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள்
மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களேயானால் அவர்கள் அரசாங்கத்தின் முற்போக்குத்தனமான செயற்பாடுகளுக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும். மாறாக எல்லா விடயங்களையும் எதிர்த்துக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்த முனைவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
அன்மைய அனர்த்த நிலைமைகளின்போது ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் முஸ்லிம் சமூகம், தமிழ், சிங்கள சமூகங்கள் இலங்கையின் நாலாபுறங்களிலும் உதவி செய்ய முன்வந்தமை உட்பட நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் சமூக சேவை பிரிவின் ஊடாக வழமை போன்று பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வந்தமை என்பன காரணமாக தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது.
இலங்கைத் திருநாடு எதிர்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மக்கள் நலன் என்கிற கனவை எட்டுகின்ற அளவுக்கு முன்னறி வருகின்றது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தாங்கள் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே, நாட்டை குழப்புகின்ற, அபிவிருத்தி தடைகளை ஏற்படுத்துகின்ற, ஆட்சியை குழப்புகின்ற மற்றும் வங்குரோத்து அரசியலை செய்ய முனையாமல் அதனை கைவிட்டு விட்டு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற நல்ல விடயங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்.
நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம் - எதிர்கட்சிகளிடம் வேண்டுகோள் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு போக முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் உடுமாங்கண்டு நாபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் அதில் குறிப்பிடும்போது,ஆட்சியில் இருக்கின்ற என்.பி.பி.அரசாங்கம், இழந்த பொருளாதாரம், சுகாதாரம், அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்களில் ஓரளவு சிரத்தை எடுத்து சேவையாற்றி வருகின்ற நிலையில், பிரதமர் ஹரிணிக்கு மற்றும் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசமப் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள்மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்களேயானால் அவர்கள் அரசாங்கத்தின் முற்போக்குத்தனமான செயற்பாடுகளுக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும். மாறாக எல்லா விடயங்களையும் எதிர்த்துக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்த முனைவது கண்டிக்கத்தக்க விடயமாகும். அன்மைய அனர்த்த நிலைமைகளின்போது ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் முஸ்லிம் சமூகம், தமிழ், சிங்கள சமூகங்கள் இலங்கையின் நாலாபுறங்களிலும் உதவி செய்ய முன்வந்தமை உட்பட நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் சமூக சேவை பிரிவின் ஊடாக வழமை போன்று பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வந்தமை என்பன காரணமாக தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றது.இலங்கைத் திருநாடு எதிர்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மக்கள் நலன் என்கிற கனவை எட்டுகின்ற அளவுக்கு முன்னறி வருகின்றது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தாங்கள் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.எனவே, நாட்டை குழப்புகின்ற, அபிவிருத்தி தடைகளை ஏற்படுத்துகின்ற, ஆட்சியை குழப்புகின்ற மற்றும் வங்குரோத்து அரசியலை செய்ய முனையாமல் அதனை கைவிட்டு விட்டு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற நல்ல விடயங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்.