யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும்நிலையில் திருவிழாவிற்கு யானை கொண்டுவரப்பட்டது. இதன்போது யானைக்கு மதம் பிடித்துள்ளது.
இவ்வாறு மதம் பிடித்த யானை தாக்கியதில் இரண்டு பெண்களும், நான்கு வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்ததால் அசம்பாவிதம்; குழந்தை உட்பட மூவர் காயம் யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும்நிலையில் திருவிழாவிற்கு யானை கொண்டுவரப்பட்டது. இதன்போது யானைக்கு மதம் பிடித்துள்ளது.இவ்வாறு மதம் பிடித்த யானை தாக்கியதில் இரண்டு பெண்களும், நான்கு வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.