• Jul 25 2025

யாழில் மதுபோதையில் கொடூர தாக்குதல்; இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்

Chithra / Jul 24th 2025, 8:26 am
image


யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. 

இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

யாழில் மதுபோதையில் கொடூர தாக்குதல்; இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.இதுகுறித்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement