சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற நூல் வெளியீடு எதிர்வரும் 09.05.2025 வெள்ளிக் கிழமையன்று பி.ப. 4.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள 'ஜெஸ்மின்' அரங்கில் நடைபெறவுள்ளது.
அப்றார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுனர் ஹனீப் யூஸூப் அவர்கள் கலந்து கொள்வதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் கௌரவ அதிதியாகவும் முன்னாள் மேல்மானாண ஆளுனர் அல்ஹாஜ் அஸாத் சாலி அவர்களும் கலந்து கொள்வார்கள்.
நூல் பற்றிய கருத்துரையை ஆசிரியையும் இலங்கைத் திறந்த பல்கலைக் கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி சுமையா ஷரிப்தீன் வழங்க ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் 'நூல் கடந்த நோக்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.
பதிலுரைகளை டாக்டர் ஷாபி சிகாப்தீன், நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்துவார்கள். வரவேற்புரையை செல்வி ஸெய்னப் ஷாபி நிகழ்த்துவார். திருமதி ஆஷிகா பர்ஸான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை இன்று சந்தித்தார்கள். இந்த சந்திப்பில் முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் கீழ்காணும் விடயங்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் கட்டத்தில், குறிப்பாக அமெரிக்காவின் எதிர்பாராத உயர்வு வரி விதிப்புகளின் மத்தியில், GSP+ சலுகை இலங்கைக்கு வழங்கப்படுவது மிக முக்கியமானது என்பதை எமது கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
இருப்பினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கீழ்க்காணும் விடயங்களில் நடந்து கொள்ளும் விதி கவலைக்குரியதாக உள்ளதாகவும் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார.
1. பயங்கரவாத தடைச் சட்டம்
பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைத் தரநிலைகளுடன் முழுமையாக ஒத்துச் செல்லும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
2. PTA பயன்படுத்துவதில் இடைநிறுத்தம்
புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை, PTA பயன்படுத்தப்பட கூடாது., ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தொடர்ந்துவரும் விசாரணைகளுக்கு மாத்திரம் ஒருவிதி விளக்கு இருக்கலாம்.
3. கருத்து சுதந்திரத்தின் பாதுகாப்பு
PTA சட்டத்தை கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காகப் பயன்படுத்துவதை கடுமையாகக் கண்டிக்கிறோம். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடுமைகளை எதிர்த்து ஸ்டிக்கர் ஒட்டியதற்காக வPTA பயன்படுத்தி முஸ்லிம் இளைஞனை தடுத்து வைத்தது ஏற்க முடியாதது. அதை நாங்கள் கண்டிக்கின்றோம். இதற்காக உரிய இளைஞனிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்.
4. மாகாண சபை தேர்தல்கள்
மாகாண சபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் மற்றும் அவற்றை முன்னெடுக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
5. பாராளுமன்ற ஜனநாயகமும் கட்சி தலைமை அங்கீகாரமும்
சிறந்த ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்ப, உறுப்பினர்கள் எந்த கட்சியின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் உண்மையாகவே எந்தக் கட்சியில் சேர்ந்தவர்கள் என்று விடயத்தில் அறிந்து அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக சபாநாயகர் ஏற்க மறுப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்க வேண்டும்.
தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம்,கணினி அடிப்படை உணர்தல் எனும் நூல் வெளியீடு*
வளர்ந்து வரும்தொழில்நுட்பத்தை, மனித தலைமுறையை உருவாக்க பள்ளிப் பாட அமைப்பில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஒரு பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் உட்பட தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம்,கணினி அடிப்படை உணர்தல் எனும் நூல் வெளியீடு நேற்றைய தினம் சனிக்கிழமை மினுவாங்கொடை நகரசபை நுலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்த நூலினை பிரபல கணனி தொடர்பிலான நிபுனரும், விரிவுரையாளருமான,ஆசிரியர் எல். எம். ரிஸ்லான் சிங்கள மொழியில் எழுதி இருந்தார்.
மேற்படி நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக களனி பல்கலைக்கழக சமஸ்கிருதம் மற்றும் சர்வதேச சமயத் துறையின் மூத்த பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்தன ஹிமி
அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸின் முகாமைத்துவ பணிப்பாளரும்,உளவியல் ஆலோசகர் - பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்கார்,மேல் மாகான முன்னாள் முதலமைச்சரும் கல்வி மாநகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ரெஜி ரனதுங்க கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் தலைவர் பிரசன்ன ரணதுங்க,முன்னாள் நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,தினமின பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியரும் ஊடக ஆலோசகருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க கொடகும்புர, மூத்த ஊடகவியராளர் கலா பூஷணம், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னால் தமிழ் ஊடக ஆலோசகர். எம்.ஏ.எம். நிலாம் (ஈழுத்து நூன்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நூலாசிரியர் எஸ். எல். ரிஸ்லான் பற்றி சில பதிவுகள் :-
24.01.1989 ஆண்டு மினு வான் கொடையில் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியினை கல்லொலுவ லும்பினி மற்றும் நாளந்தா தேசிய பாடசாலை மினுவாங்கொடை (1994 - 2005) ஆகியவற்றிலும் மேற்கொண்டார்.
கம்ப்யூட்டர் தொடர்பிலான ஆரம்ப டிப்ளமோ, கணினி வன்பொருள் டிப்ளமோ பகுதி I,II (2009) கணினி தேசிய உயர் டிப்ளோமா (எச்என்டி ) (2010) லும் நிறைவு செய்திருந்தார்.
Vx டெலிகாமின் தலைமை தகவல் தொழில்நுட்ப அமைப்பின் பிரதான அதிகாரியாகவும்,அப்போதைய மேல்மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவின் தமிழ் ஊடகச் செயலாளரும் (2013) இல் கடமையாற்றி இருந்தார்.
பிரிட்டிஷ் கணினி சங்கத்தின் உறுப்பினராக (2010) இலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளராக (2017) இலும்இலங்கை கணினி சங்கத்தின் உறுப்பினர் (2020) இலும் அங்கதத்துவம் வகித்தார்.
முழு தீவுக்கும் சமாதான நீதிவான் (2021) வும், சிவில் சர்வீஸை முடித்தல் (2022) வும்,வெளிநாட்டில் பத்ர் இன்ஸ்டிடியூட் கிராண்ட் கணினி வடிவமைப்பு அதிகாரியாகவும் (2022) சமூக அரசியல் செயல்பாட்டாளராக எஸ். எல். ரிஸ்லான் இருந்துள்ளார்.
தான் கற்ற கல்வியையும் அனுபவத்தையும் கொண்டு கல்வி சமூகத்திற்கான நூல் ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற இலக்கில் மேற்படி நூலினை சிங்கள மொழியில் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் வெளியீடு சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற நூல் வெளியீடு எதிர்வரும் 09.05.2025 வெள்ளிக் கிழமையன்று பி.ப. 4.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள 'ஜெஸ்மின்' அரங்கில் நடைபெறவுள்ளது.அப்றார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுனர் ஹனீப் யூஸூப் அவர்கள் கலந்து கொள்வதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் கௌரவ அதிதியாகவும் முன்னாள் மேல்மானாண ஆளுனர் அல்ஹாஜ் அஸாத் சாலி அவர்களும் கலந்து கொள்வார்கள்.நூல் பற்றிய கருத்துரையை ஆசிரியையும் இலங்கைத் திறந்த பல்கலைக் கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி சுமையா ஷரிப்தீன் வழங்க ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் 'நூல் கடந்த நோக்கு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.பதிலுரைகளை டாக்டர் ஷாபி சிகாப்தீன், நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்துவார்கள். வரவேற்புரையை செல்வி ஸெய்னப் ஷாபி நிகழ்த்துவார். திருமதி ஆஷிகா பர்ஸான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை இன்று சந்தித்தார்கள். இந்த சந்திப்பில் முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் கீழ்காணும் விடயங்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் கட்டத்தில், குறிப்பாக அமெரிக்காவின் எதிர்பாராத உயர்வு வரி விதிப்புகளின் மத்தியில், GSP+ சலுகை இலங்கைக்கு வழங்கப்படுவது மிக முக்கியமானது என்பதை எமது கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.இருப்பினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கீழ்க்காணும் விடயங்களில் நடந்து கொள்ளும் விதி கவலைக்குரியதாக உள்ளதாகவும் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார.1. பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைத் தரநிலைகளுடன் முழுமையாக ஒத்துச் செல்லும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.2. PTA பயன்படுத்துவதில் இடைநிறுத்தம்புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை, PTA பயன்படுத்தப்பட கூடாது., ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தொடர்ந்துவரும் விசாரணைகளுக்கு மாத்திரம் ஒருவிதி விளக்கு இருக்கலாம்.3. கருத்து சுதந்திரத்தின் பாதுகாப்புPTA சட்டத்தை கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காகப் பயன்படுத்துவதை கடுமையாகக் கண்டிக்கிறோம். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடுமைகளை எதிர்த்து ஸ்டிக்கர் ஒட்டியதற்காக வPTA பயன்படுத்தி முஸ்லிம் இளைஞனை தடுத்து வைத்தது ஏற்க முடியாதது. அதை நாங்கள் கண்டிக்கின்றோம். இதற்காக உரிய இளைஞனிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்.4. மாகாண சபை தேர்தல்கள்மாகாண சபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் மற்றும் அவற்றை முன்னெடுக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.5. பாராளுமன்ற ஜனநாயகமும் கட்சி தலைமை அங்கீகாரமும்சிறந்த ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்ப, உறுப்பினர்கள் எந்த கட்சியின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் உண்மையாகவே எந்தக் கட்சியில் சேர்ந்தவர்கள் என்று விடயத்தில் அறிந்து அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக சபாநாயகர் ஏற்க மறுப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்க வேண்டும்.தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம்,கணினி அடிப்படை உணர்தல் எனும் நூல் வெளியீடு*வளர்ந்து வரும்தொழில்நுட்பத்தை, மனித தலைமுறையை உருவாக்க பள்ளிப் பாட அமைப்பில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஒரு பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.புதிய பாடத்திட்டம் உட்பட தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம்,கணினி அடிப்படை உணர்தல் எனும் நூல் வெளியீடு நேற்றைய தினம் சனிக்கிழமை மினுவாங்கொடை நகரசபை நுலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்த நூலினை பிரபல கணனி தொடர்பிலான நிபுனரும், விரிவுரையாளருமான,ஆசிரியர் எல். எம். ரிஸ்லான் சிங்கள மொழியில் எழுதி இருந்தார்.மேற்படி நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக களனி பல்கலைக்கழக சமஸ்கிருதம் மற்றும் சர்வதேச சமயத் துறையின் மூத்த பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்தன ஹிமிஅமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸின் முகாமைத்துவ பணிப்பாளரும்,உளவியல் ஆலோசகர் - பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்கார்,மேல் மாகான முன்னாள் முதலமைச்சரும் கல்வி மாநகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ரெஜி ரனதுங்க கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் தலைவர் பிரசன்ன ரணதுங்க,முன்னாள் நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,தினமின பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியரும் ஊடக ஆலோசகருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க கொடகும்புர, மூத்த ஊடகவியராளர் கலா பூஷணம், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னால் தமிழ் ஊடக ஆலோசகர். எம்.ஏ.எம். நிலாம் (ஈழுத்து நூன்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.நூலாசிரியர் எஸ். எல். ரிஸ்லான் பற்றி சில பதிவுகள் :-24.01.1989 ஆண்டு மினு வான் கொடையில் பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியினை கல்லொலுவ லும்பினி மற்றும் நாளந்தா தேசிய பாடசாலை மினுவாங்கொடை (1994 - 2005) ஆகியவற்றிலும் மேற்கொண்டார்.கம்ப்யூட்டர் தொடர்பிலான ஆரம்ப டிப்ளமோ, கணினி வன்பொருள் டிப்ளமோ பகுதி I,II (2009) கணினி தேசிய உயர் டிப்ளோமா (எச்என்டி ) (2010) லும் நிறைவு செய்திருந்தார்.Vx டெலிகாமின் தலைமை தகவல் தொழில்நுட்ப அமைப்பின் பிரதான அதிகாரியாகவும்,அப்போதைய மேல்மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவின் தமிழ் ஊடகச் செயலாளரும் (2013) இல் கடமையாற்றி இருந்தார்.பிரிட்டிஷ் கணினி சங்கத்தின் உறுப்பினராக (2010) இலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளராக (2017) இலும்இலங்கை கணினி சங்கத்தின் உறுப்பினர் (2020) இலும் அங்கதத்துவம் வகித்தார்.முழு தீவுக்கும் சமாதான நீதிவான் (2021) வும், சிவில் சர்வீஸை முடித்தல் (2022) வும்,வெளிநாட்டில் பத்ர் இன்ஸ்டிடியூட் கிராண்ட் கணினி வடிவமைப்பு அதிகாரியாகவும் (2022) சமூக அரசியல் செயல்பாட்டாளராக எஸ். எல். ரிஸ்லான் இருந்துள்ளார். தான் கற்ற கல்வியையும் அனுபவத்தையும் கொண்டு கல்வி சமூகத்திற்கான நூல் ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற இலக்கில் மேற்படி நூலினை சிங்கள மொழியில் அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.