மட்டக்களப்பு தாழங்குடா முதலாம் குறிச்சி பகுதிக்குள் இன்று அதிகாலை மக்கள் குடியிருப்பு பகுதி காணிக்குள் திடீரென புகுந்த முதலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
குறித்த முதலையை பொதுமக்கள் சேர்ந்து நள்ளிரவில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் மடக்கி பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
கடந்த ஓரிரு தினங்களாக பெய்த மழை காரணத்தால் மட்டக்களப்பில் உள்ள வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள் நுழையும் நிலை அதிகமாக காணப்படுகின்றது.
கிராம மக்கள் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து அவர்கள் வருகை தந்து கட்டி வைத்திருந்த முதலையை கடும் சிரமப்பட்டு பிடித்து பாதுகாப்பாக மீட்டு மனித நடமாட்டம் அற்ற நீர்நிலையில் விடுவித்துள்ளனர்.
குடியிருப்புக்குள் புகுந்த இராட்சத முதலை- கடும் போராட்டத்துடன் மடக்கிப் பிடித்த மக்கள் மட்டக்களப்பு தாழங்குடா முதலாம் குறிச்சி பகுதிக்குள் இன்று அதிகாலை மக்கள் குடியிருப்பு பகுதி காணிக்குள் திடீரென புகுந்த முதலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுகுறித்த முதலையை பொதுமக்கள் சேர்ந்து நள்ளிரவில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் மடக்கி பிடித்து கட்டி வைத்துள்ளனர்.கடந்த ஓரிரு தினங்களாக பெய்த மழை காரணத்தால் மட்டக்களப்பில் உள்ள வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள் நுழையும் நிலை அதிகமாக காணப்படுகின்றது.கிராம மக்கள் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து அவர்கள் வருகை தந்து கட்டி வைத்திருந்த முதலையை கடும் சிரமப்பட்டு பிடித்து பாதுகாப்பாக மீட்டு மனித நடமாட்டம் அற்ற நீர்நிலையில் விடுவித்துள்ளனர்.